Monday, 10 June 2013

இந்தியாவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்- ஆய்வு,



டோக்கியோ : உலக வெப்பமயமாதலின் விளைவாக நடப்பு நூற்றாண்டின் இறுதியில் பூமியின் 42 சதவீதம் நிலப்பரப்பு நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகளவில் ஏற்படும் எனவும் ஆய்வு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ பல்கலைக்கழகம், இயற்கை தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து நடத்திய ஆய்வில் தற்போதுள்ள உலக வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து 2100ல் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸ் அளவை எட்டினால் வெள்ள அபாயம் 5.6 மில்லியன் முதல் 80 மில்லியன் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் உலகின் 29 முக்கிய நதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படும் எனவும் இது ஒவ்வாரு 10 முதல் 50 ஆண்டுகளுக்கு அதிகரித்த வண்ணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment