ராக்கின் மோசுல் நகரில் இருந்து சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரை முஸ்லிம் தீவிரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்து செல்கின்றவர்களில் ஈராக்கிய துருப்பினரும் உள்ளடங்குவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லிம் போராளிகள் குழு தற்போது பாரிய எரிபொருள் களஞ்சியசாலை அமைந்துள்ள பாய்ஜி பகுதியையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு அவசர கால சட்டத்தை அமுலாக்குமாறு ஈராக்கின் பிரதமர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தை கோரியுள்ளார்.
இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்த நடவடிக்கையானது, பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment