லண்டன்:"பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்படுகின்றனர்' என, சமீபத்தில், லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள, பொருளாதார விவகார மையம் (ஐ.ஈ.ஏ.) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
பணியிலிருந்து ஓய்வு பெறும் நபர்களுக்கு துவக்கத்தில், லேசாக உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. நாளடைவில், அது அதிகரித்து, அவர்களை மனதளவிலும் பாதித்து விடுகிறது. அதாவது, மனதளவில், 40 சதவீத பாதிப்பும், உடல் அளவில், 60 சதவீத பாதிப்பும் இவர்களுக்கு ஏற்படுகிறது.
இது, ஆண், பெண் என, இருபாலருக்கும் உள்ள பிரச்னை. இதில், "நமக்கு வயதாகிவிட்டது, உடல்நிலை மோசமடைந்துவிட்டது' என்ற, எண்ணமே பலரையும் முடக்கிப் போட்டு விடுகிறது.
எனவே, பணியில் உள்ளவர்கள், தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். இதன் மூலம், அவர்களது உடல்நலம் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களது பொருளாதார தேவையும் பூர்த்தி அடையும்.
இவ்வாறு, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திட்ட இயக்குனர், பிலிப்பூத் கூறுகையில், ""அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பிரிட்டன் அரசு தவறிவிட்டது; தொழிலாளர்களை நீண்ட நாட்களுக்கு பணியாற்ற அனுமதிக்க வேண்டும். ஓய்வு பெறும் வயதில் உள்ள கட்டுப்பாடுகளை, அரசு நீக்க வேண்டும்,'' என்றார்.
மற்றொரு ஆய்வாளர், எட்வர்டு தாட்நவ் கூறுகையில், ""எதிர்காலத்தில், ஓய்வு பெறும் வயது என்பதே இருக்கக்கூடாது,'' என்றார்.
No comments:
Post a Comment