தன் வீட்டில் திருடிய திருடனை பிடித்த வீட்டு உரிமையாளர் அவருக்கு வேலை வாய்ப்பை அளித்து மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.
இத்தாலி
நாட்டின் புளாரன்ஸ் நகரை சேர்ந்த பாவ்லோ பெட்ரோட்டி(62) என்பவரின்
வீட்டில் புகுந்த திருடன், காரில் இருந்த தாமிர கம்பிகளை திருடிக்கொண்டு ஓட
முயன்றுள்ளார். ஆனால் பெட்ரோட்டி அந்த திருடனை பிடித்து திருடிய பொருட்களை
பறிமுதல் செய்தார்.
பின்னர் அந்த திருடனிடம் விசாரித்தபொழுது, வேலை இல்லாததால் மனைவியின்
ஓய்வூதியத்தில் பிழைப்பு நடத்துவதாகவும், அந்த பணம் போதுமானதாக இல்லாததால்
திருடியதாகவும் திருட வந்திருந்த மார்சிலோ தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருடன் மார்சிலோ விடுவிக்கப்பட்டார். மார்சிலோவின் வீட்டு
விலாசத்தை வாங்கி கொண்ட பெட்ரோட்டி மறுநாள் அவருக்கு கடிதம் எழுதி தன்
வீட்டில் வேலை செய்ய வருமாறு அழைத்துள்ளார்.
தோட்டம் மற்றும் குடியிருப்பை பராமரிக்க ஒரு மணி நேரத்துக்கு 55 ரூபாய்
சம்பளம் பேசினார். இந்த சம்பளத்துக்கு வேலை செய்ய மார்சிலோ ஒப்புக் கொண்டு
திருட்டு தொழிலை விட்டு விட்டு தற்போது கிடைத்துள்ள தொழிலை சந்தோஷமாக
செய்து வருகின்றார்.
No comments:
Post a Comment