கோவை : "உலக அளவில், ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில், ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் வெறிநாய் கடிக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர்' என, கோவை கால்நடை பன்முக மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்தார். "உலக வெறிநோய் தினம்' ஒவ்வொரு ஆண்டும் செப்., 28ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெறிநோயின் முக்கியத்துவம் மற்றும் நோய் கட்டுபடுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், கோவை கால்நடை பன்முக மருத்துவமனையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமை, மேயர் வேலுச்சாமி, எம்.எல்.ஏ., துரை துவக்கி வைத்தனர். மொத்தம் 178 நாய்கள் மற்றும் 26 பூனைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.கால்நடை பன்முக மருத்துவமனை தலைமை டாக்டர் ராஜேந்திரன் கூறுகையில், ""வெறிநாய் கடியால் ஒருவர் பாதிக்கப்படும்போது, மூளை மற்றும் தண்டுவடத்தை முழுவதும் செயலிழக்கச் செய்கிறது. உலக அளவில், ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில், ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் வெறிநாய் கடிக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நாய்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம், இதை முற்றிலும் தடுக்கலாம். நாய்கள் பிறந்த மூன்று மாதங்களுக்கு பின் தான் தடுப்பூசி போடுவதை துவங்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அப்போதுதான், வெறிநோயால் ஏற்படும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.
Sunday, 29 September 2013
அரை மணி நேரத்துக்கு ஒருவரை "காவு' வாங்கும் வெறிநாய்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment