ருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே மாங்குடியில், "கணவரின் நண்பர்' என்று
அறிமுகமாகி, பைக்கில் வந்த வாலிபர், வீட்டு பீரோவிலிருந்த 10 பவுன்
நகையைத் திருடிச் சென்றார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர்
அருகேயுள்ள மாங்குடியைச் சேர்ந்தவர் அழகர்,30. பெங்களூருவில்
பணிபுரிகிறார். இவரது மனைவி ராமபிரபா,25. இவர் தனது குழந்தையுடன்,
மாங்குடியில் உள்ள அழகரின் தாயார் ராமாயி,70, உடன் வசிக்கிறார். கடந்த
ஏப்., 9 மதியம் ஒரு மணிக்கு, மாங்குடி வீட்டிற்கு நம்பர் இல்லாத பைக்கில்
ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் ""அழகர் வீடு இது தானா'' என்று
விசாரித்துள்ளார். வீட்டிலிருந்த ராமபிரபாவிடம், ""மேலூரிலிருந்து
வருகிறேன். அழகர், ஒரு வார லீவில் வருவதாக சொன்னானே, வந்தானா ' எனக் கேட்டு
உள்ளார். அதற்கு ராமபிரபா, "வரவில்லையே ' என்றதும், ""பரவாயில்லை. உங்கள்
கல்யாணத்திற்கு தான் வர முடியவில்லை. உங்கள் கல்யாண போட்டோ ஆல்பத்தை
தாருங்கள், பார்க்கிறேன்,'' என கேட்டுள்ளார்.
ராமபிரபா, பீரோவைத்
திறந்து, ஆல்பத்தை தந்துள்ளார். பிறகு, ராமபிரபா, பால்வாடி சென்றுள்ள
குழந்தையை அழைத்து வரச் செல்வதாக கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், ரூ.
50 யை ராமபிரபாவிடம் கொடுத்து, குழந்தையை அழைத்து வரும் போது பிஸ்கட்
வாங்கி வரச் சொல்லியுள்ளார். குழந்தையுடன் வீட்டுக்கு வரும் வழியில்,
கணவர் அழகருக்கு போன் செய்த ராமபிரபா, அவரது நண்பரின் வருகை குறித்து தகவல்
கூறியுள்ளார். அழகர்,"" அப்படி யாரும் எனக்கு நண்பர் இல்லை. யாரையும்
வீட்டிற்கு வரச் சொல்லவில்லை,'' என கூறியுள்ளார். அதிர்ச்சியுடன்
வீட்டிற்கு ராமபிரபா வந்தபோது, ராமாயி அம்மாள் மட்டும் வீட்டின் முன்புறம்
உட்கார்ந்துள்ளார்.
வீட்டிற்கு வந்து விசாரித்த போது, அந்த வாலிபர்
சென்று விட்டதாக, ராமாயி கூறியுள்ளார். ஒன்றும் புரியாமல், ராமபிரபா விட்டு
விட்டார். நேற்று பீரோவைத் திறந்து பார்த்த போது, அதில் இருந்த 10 பவுன்
தங்க நகைகள்,வெள்ளிக்கொலுசு திருடு போனது தெரிய வந்தது. வாலிபர் போட்டோ
ஆல்பத்தை கேட்ட போது, பீரோவைத் திறக்கையில் நோட்டமிட்ட வாலிபர், ராம
பிரபா வெளியே சென்றவுடன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. கண்டவராயன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment