புதுடில்லி: வரும் 2014-ம் ஆண்டில் நடைபெற உள்ள பொது
தேர்தலில் சமூக வலை தளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் வெற்றி
வாய்ப்பு குறித்து கலக்கம் அடைந்துள்ளது.
சமூக வலைதளங்கள் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக
வலைதளங்கள் மக்களின வாழ்வில் ஒன்றாகி விட்ட நிலையில் அவை நடைமுறையில்
பலவித மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையி்ல் வரும் 2014-ம் ஆண்டு
நடைபெற உள்ள லோக்சபா பொது தேர்தலில் இத்தகைய சமூக வலை தளங்கள் முக்கிய
பங்கு வகிக்க உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதலிடம்: இதன்படி நாட்டில் உள்ள மொத்த 543 பார்லிமென்ட் தொகுதிகளில் சுமார் 160 தொகுதிகளில் சமூக வலை தளம் முடிவை மாற்றி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்க உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 21 தொகுதிகள், குஜராத்தில் 17 தொகுதிகளில் சமூக வலை தளம் தேர்தல் முடிவை மாற்றி அமைக்கும் சக்தியாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசத்தில்14 தொகுதி, கர்நாடகா 12 தொகுதி, தமிழ்நாடு 12 தொகுதி, ஆந்திராவில் 11 தொகுதி, கேரளத்தில் 10 தொகுதிகள் என மாநிலங்கள் வாரியாக தேர்தல் வெற்றி குறித்து நிர்ணயம் செய்யும் சக்தியாகவும் குறைந்த பட்சம் 10 சதவீதம் வித்தியாசத்தை உருவாக்கும் வல்லமை கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் 9 தொகுதிகள், டில்லி 7 தொகுதிகள் , ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் தலா 5 தொகுதிகள், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தலா 4 தொகுதிகளில் மாற்றம் ஏற்படும். மேலும் 67 தொகுதிகளி்ல் நடுத்தர விளைவை ஏற்படுத்தும் எனவும், 60 தொகுதிகளி்ல் குறைந்தபட்ச விளைவையும், 250 தொகுதிகளில் மேற்கண்ட சமூகவலை தளங்கள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான செய்தி தொடர்பான ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment