Friday, 12 April 2013

ஏமாற்றி திருமணம் செய்ததாக மனைவி மீது வழக்கு

தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், அதனைக் கேட்டதற்கு தன்னை மிரட்டுவதாகவும் கணவர் கொடுத்த புகாரின் பேரில் மனைவி உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், கல்விநாதர் தெருவைச் சேர்ந்தவர்  பழனிக்குமார் (36). இவருக்கும் ராஜபாளையம், மில்கிருஷ்ணாபுரம், சுப்புலட்சுமி (32) என்பவருக்கும் 28.10.2008-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது சுப்புலட்சுமி எம்.காம். படித்து அரசு வேலை பார்த்து வருவதாகக் கூறினார்களாம். மேலும் ஏற்கெனவே சுப்புலட்சுமிக்கு இரு முறை திருமணம் நடைபெற்றதை மறைத்து  திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும், இதுகுறித்து கேட்ட போது சுப்புலட்சுமி தரப்பினர் மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பழனிக்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். இதன் பேரில் போலீஸார் சுப்புலட்சுமி, அ.பால்ராஜ், இவரது மனைவி ராஜேஸ்வரி, இவரது மகன் தனசேகர், அ.சக்திவேல் (எ) சத்தியன், பரமேஸ்வரி, சத்தியன் மகள் உமாதேவி, பெ.பொன்மாரி செல்வன் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment