ஜதராபாத்:ஆந்திராவில் பெண் சிசுக் கொலைகள் அதிகம் நடப்பதாக புகார்
எழுந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள, "ஸ்கேனிங் சென்டர்'களில்,
அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில், ஆண்
குழந்தைகளின் பிறப்பை ஒப்பிடுகையில், பெண் குழந்தைகளின் பிறப்பு,
பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த, 2011ல்
எடுக்கப்பட்ட ஆய்வின்படி, 1,000 ஆண்களுக்கு, 943 பெண்கள் என்ற விகிதாசாரம்
உள்ளது.
இது, மாநில அரசு அதிகாரிகளிடையே, கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கருவின் வளர்ச்சியை கண்காணிப்பதற்காக, மாநிலத்தில் ஏராளமான, ஸ்கேனிங்
சென்டர்கள் உள்ளன. இவற்றில், கருவிலிருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என,
தெரிவிப்பது, சட்டப்படி குற்றம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக,
ஆந்திராவில் உள்ள, பல ஸ்கேனிங் சென்டர்களில், கருவிலிருக்கும் குழந்தை,
ஆணா, பெண்ணா என்பது பற்றி, வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதாகவும், பெண்
குழந்தைகள் என்றால், அவற்றின் பெற்றோர், அவற்றை, கருவிலேயே அழித்து
விடுவதாகவும், புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சட்டத்தை மீறி
செயல்படும், ஸ்கேனிங் சென்டர்களில், அதிரடிச் சோதனையை, ஆந்திர மாநில
சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவற்றில், 42 ஸ்கேனிங்
சென்டர்கள், சட்ட விரோதமாக செயல்பட்டது, கண்டறியப்பட்டு, அவற்றின் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில குடும்ப நலத் துறை கமிஷனர், பூனம் கூறியதாவது:
சட்டத்தை
மீறி செயல்படும், ஸ்கேனிங் சென்டர்கள் மீது, கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். இதில், எந்தவிதமான, அரசியல் தலையீடுக்கும் இடம் தரப்பட
மாட்டாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது, கடும்
நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி.
ஸ்கேனிங் சென்டர்களின் நடவடிக்கைகள்
குறித்து கண்காணிப்பதற்காக, மாவட்ட அளவில், சிறப்பு குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன. சட்டத்துக்கு புறம்பாக செயல்படும், ஸ்கேனிங் சென்டர்கள்
குறித்து, 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு<, பொதுமக்கள் புகார்
அளிக்கலாம். இதற்கு, கட்டணம் கிடையாது.
இவ்வாறு, பூனம் கூறினார்.
No comments:
Post a Comment