Sunday, 14 April 2013

பழகிய பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த காதலன் கைது

ஆண்டிபட்டி: பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்ததாக வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவியின் உடலை தோண்டி எடுத்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலகோம்பையை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் நதியா (15). இவர் தெப்பம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி(24). இவர் டிராக் டர் டிரைவராக உள்ளார். கடந்த 4 மாதம் முன்பு வீரபாண்டி, நதியா இடையே பழக்கம் ஏற்பட்டது.  இருவரும், அண்ணன் & தங்கை உறவுமுறை கொண்டவர்கள். அதனால் இவர்கள் பழக்கத்துக்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.ஏப்ரல் முதல் தேதியன்று பள்ளிக்கு சென்ற நதியா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். சந்தேகத்தின் பேரில் வீரபாண்டியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘கடந்த 4 மாதமாக நதியாவுடன் பழகி வந்தேன். ஏப்.1ம் தேதியன்று ஆண்டிபட்டி அருகே மலையடிவாரத்தில் உள்ள ஆவாரம்பட்டி ஓடைப்பகுதிக்கு அழைத்து சென்றேன். அங்கு நதியாவுடன் உல்லாசமாக இருந்தேன். இந்நிலையில் என் வீட்டில் பெண் பார்த்து வருவதாக தெரிவித்தேன். அப்போது நதியா தன்னைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், மறைத்து வைத்திருந்த உளியால் நதியா வயிற்றில் குத்தினேன். இதில் உயிருக்கு போராடிய நதியாவை, அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பிறகு ஆவாரம்பட்டி மலையடிவாரத்தில் குழிதோண்டி புதைத்தேன்’ என்றார். இதைத்தொடர்ந்து போலீசார் வீரபாண்டியை கைது செய்தனர்.நேற்று முன்தினம் மதியம் டாக்டர்கள் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

No comments:

Post a Comment