Sunday, 14 April 2013

ஜட்டி தெரியும்படி பேன்ட் அணிய அமெரிக்காவில் தடை

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின், லூசியானா மாகாணத்தில், ஜட்டி தெரியும்படி இடுப்புக்கு கீழ் பேன்ட் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் ஜட்டி தெரியும்படி, இடுப்புக்கு கீழ் பேன்ட் அணிவது, தற்போதைய பேஷனாக உள்ளது. இளம்பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்காவின், லூசியானா மாகாணத்தில் உள்ள டெரிபோன் பரிஷ் என்ற நகரில், ஜட்டி தெரியும்படி பேன்ட் அணிவதை, அந்த ஊர் பெரியவர்கள், ஒழுக்க குறைபாடாக கருதுகின்றனர். ஜட்டி தெரியும்படி பேன்ட் அணிந்து செல்லும் பெண்ணுக்கு பின், பல இளைஞர்கள் சுற்றுவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, பரிஷ் நகரில், ஒழுக்க குறைபாடாக பேன்ட் அணிபவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்து எட்டு உறுப்பினர்களும், எதிர்த்து ஒருவரும் ஓட்டு போட்டார். தீர்மானம் வெற்றி பெற்றதால், ஜட்டி தெரியும்படி பேன்ட் அணிய தடை விதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. முதல் முறையாக இந்த தவறு செய்பவர்களுக்கு, 2,500 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை தவறு செய்தால், 5000 ரூபாய் அபராதம் மற்றும், 16 மணி நேரம், சமூக சேவையும் செய்ய வேண்டும், என்ற தண்டனை வரையறுக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment