Sunday, 14 April 2013

முகூர்த்த நேரத்தில் தாலி மாயம்: மணமக்கள் அதிர்ச்சி

சிவகங்கை:காரைக்குடி திருமண மண்டபத்தில் கடைசி நேரத்தில் தாலி மாயமானதால் மணமக்கள்,பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. மணமக்கள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என, ஏராளமானோர் கூடியிருந்தனர்.திருமணத்திற்கு முன்பு, நடக்கவேண்டிய சடங்கு முறைகள்மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தன. அப்போது, திடீரென மணமகனின் தந்தையை சடங்கு நிகழ்ச்சியில்பங்கேற்க அழைத்தனர். அவசரத்தில், அவர் தனது கையில் வைத்திருந்த பேக்கை, அருகில் வைத்து விட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சிறிது நேரம் கழித்து பேக்கை பார்த்தபோது, காணவில்லை. அதில்,மணமகள் கழுத்தில் கட்டவேண்டிய ஒன்றரை பவுன் தாலி மற்றும் 2 பவுன் மோதிரம் ரூ.25 ஆயிரம் இருந்ததுதெரியவந்தது. முகூர்த்த நேரத்தில் தாலி மாயமான தகவல் மண்டபம் முழுவதும்பரவியது. மணமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். முகூர்த்தம் நெருங்கியதால் வேறு வழியின்றி, உடனே புதிய தாலி வாங்கி வந்தனர். இதன்பின், மணமகன், மணமகளின் கழுத்தில் தாலி கட்டினார். திருமண மண்டபத்தில் தாலி, மோதிரம் காணாமல் போனதால் யாரை சந்தேகப்பது என,தெரியாமல் போலீசார் திணறினர்.திருமண பணியில் இருந்ததால் தாலி, மோதிரம், பணம் திருடு குறித்து, மணமக்கள் வீட்டார் நேற்று மாலை வரை போலீசில் எழுத்து பூர்வ புகார் தரவில்லை.

No comments:

Post a Comment