அருப்புக்கோட்டை:முன்
விரோத்தில் கள்ளகாதலன் வெட்டிக்கொலை. தடுத்த மனைவி, தாயை அரிவாள்
வெட்டியவர் தப்பி ஓடினார். அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் தெற்குபட்டியை
சேர்ந்தவர் சக்திகணேசன், 35, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த
முனீஸ்வரிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனை முனீஸ்வரியின் கணவர்
செல்வம், 33, கண்டித்து, மிரட்டல் விடுத்தார். பயந்த முனீஸ்வரி 2013,
பிப்., 11 ல் , மகள் பராசக்தி, மகன் பாலமுருகன் ஆகியோருடன் வீட்டில்
மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் மூவரும் இறந்தனர். செல்வம்
சக்தி கணேசனை பலி வாங்க நேரம் பார்த்து கொண்டிருந்தார்.
நேற்று இரவு
7.30 மணியளவில் குடிபோதையில் தெற்குபட்டியில் வந்த சக்தி கணேசனை , செல்வம்
அரிவாளால் முகம் மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார். இதில் சக்திகணேசன்
சம்பவ இடத்தில் பலியானார். தடுக்க வந்த அவரின் மனைவி லட்சுமிக்கும், தாய்
முத்துபேச்சியையும் அரிவாளால் வெட்டி விட்டு செல்வம் தப்பி ஓடினார்.
காயமடைந்த இருவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment