Monday, 15 July 2013

மனைவியின் உடலில் 100 இடங்களில் பிளேடால் கீறிய கணவன்



மும்பை : பிரிந்து வாழ்ந்த மனைவியை, கடத்திச் சென்று, அவரின் உடலில், 100 இடங்களில் பிளேடால் கீறிய, "சைக்கோ' கணவனை போலீசார் கைது செய்தனர். மும்பை, சீவ்ரி பகுதியைச் சேர்ந்தவர் பாசு உஸ்மான் அக்பர். இவருக்கும், 21 வயது பெண் ஒருவருக்கும், "பேஸ்புக்' மூலம் அறிமுகம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணிடம், தான் ஒரு தொழில் அதிபர் என, பாசு கூறினார். பின், இருவரும் பதிவுத் திருமணம் செய்தனர். திருமணம் முடிந்ததும், தன் மனைவியை, கட்டாயப்படுத்தி மதம் மாற்றினார். பின், அவரிடம் பணம் கேட்டு, பல வகையிலும் கொடுமை படுத்தினார். இதனால், பாசுவால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், போலீசில் புகார் அளித்ததோடு, கணவனை பிரிந்து வாழ்ந்தார். கோர்ட்டில், விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், தான் வசிக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு, அந்தப் பெண் சென்ற போது, அவரை வழிமறித்த பாசு, தன்னுடன் வந்து குடும்பம் நடத்தும்படி கேட்டார். இதற்கு, அப்பெண் மறுக்கவே, ஆத்திரமடைந்த பாசு, அவரை கடத்திச் சென்றார். தனி அறையில் ஒன்றில், ஒன்பது நாட்களுக்கு மேலாக அடைத்து வைத்ததோடு, அவரின் உடலில், 100 இடங்களில் பிளேடால் கீறினார். இதன்பின், எப்படியோ, பாசுவின் பிடியிலிருந்து தப்பிய பெண், போலீசில் புகார் அளித்தார். போலீசார், பாசுவை கைது செய்தனர். பாசு மீது, ஏற்கனவே, 16 குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதும், அவனின் தந்தை, மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment