Friday, 19 July 2013

கடவுள் என்ற வார்த்தைக்கு அல்லா என்று மொழிபெயர்க்கலாம் என்று கூறிய வாடிகன் தூதர் எதிரக -முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

மலேசியாவிற்கு வந்துள்ள வாடிகன் தூதரை திரும்பப் பெறுமாறு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

மலேசிய நாட்டிற்கு வாடிகனில் இருந்து அனுப்பப்பட்டுள்ள முதல் தூதர் ஆர்ச்பிஷப் ஜோசப் மரினோ ஆவார். ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் இவர் மலேசியாவிற்கு வந்தார். மலாய் மொழியிலான பைபிளிலும், மற்ற இலக்கியங்களிலும் கடவுள் என்ற வார்த்தைக்கு அல்லா என்று மொழிபெயர்க்கலாம் என்று கூறியதன் விளைவாக  அவர் அரசின் கண்டனத்திற்கு ஆளானார்.  

நீதிமன்றத்தில் இதுகுறித்த விசாரணையின்போதும், தான் கத்தோலிக்க திருச்சபை முன் வைத்த வாதங்களையே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகள் என்று அவர் தெரிவித்தார். ஆயினும், செவ்வாய்க்கிழமை அன்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முன் இவரது வாதங்கள் வைக்கப்பட்டபோது, அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 

அல்லா என்ற நாமம் முஸ்லிம் மக்களால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்று  கூறிய அரசு, மலாய் மொழியிலான பைபிளில் அல்லா என்று குறிப்பிடுவது  மதம் மாறிய நிலையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்தது. ஆயினும், மலேசியாவில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் அவர் மன்னிப்பு கேட்டது குறித்து திருப்தி அடையவில்லை. 

இன்று மதிய தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம் பெரும்பான்மையினர் தலைநகரில் உள்ள வாடிகன் மையத்தின் முன்னால் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ச்பிஷப், முஸ்லிம் அல்லாதவர்களையும் அல்லாவின் பெயரைக் குறிப்பிடலாம் என்று கூறுவதன் மூலம், மலேசிய நாட்டின் எதிரி ஆகின்றார் எனவே, வாடிகன் தலைமை அவரைத் திரும்ப அழைக்கவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.  

28 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மலேசிய நாட்டில் 2.5 மில்லியன் மக்கள் கிறிஸ்துவர்களாக இருக்கும்

No comments:

Post a Comment