Friday, 5 July 2013

தாய்ப்பாலுக்கு ஏற்பட்ட கடும் கிராக்கி



மழலைக் குழந்தைகளின் ஆரோக்கியம், ஊட்டச்சத்துக்கு தாய்ப்பால் ஓர் அரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. சீனாவில் புட்டிப்பாலில் கலப்படம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் விளைவாக தாய்ப்பாலுக்கு கிராக்கி ஆரம்பமானது. இதை பயன்படுத்தி தாய்ப்பால் சுரக்கும் பெண்கள் பணம் கறக்க தொடங்கினார்கள்.
தற்போது தாய்ப்பால் பருகுவது, அதைக்கொண்டு தயாராகும் உணவுக்கு இளைஞர்கள் மத்தியிலும் மோகம் பிறந்துள்ளது. வீட்டு உபயோகப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தாய் பால் சப்ளையில் இறங்கி உள்ளன. ஒரு நிறுவனத்தின் நிர்வாகி லின் ஜூன் கூறுகையில், ‘மாதம் ரூ.1½ லட்சம் வழங்கும் வாடிக்கையாளரை சிறப்பு அந்தஸ்துடன் (டீலக்ஸ் கஸ்டமர்) கவனிக்கிறோம். இவர்கள் விரும்பினால் பெண்கள் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ நேரில் சென்று வழங்குவார்கள்’ என்கிறார்.
அதே நேரத்தில் எதிர்ப்பும் கிளம்புகிறது. பணம் சேர்ப்பதற்காக ‘மனித குலத்தை கால்நடை போல ஆக்கி விட்டார்கள்’ என்று சாடுகிறார்கள்.

No comments:

Post a Comment