Friday, 19 July 2013

பணத்தை வாங்கிகொண்டு சிறுமியிடம் பாலியல் கொடுமை-தாய் உடந்தை

பணத்தை வாங்கிகொண்டு சிறுமியிடம் பாலியல் கொடுமை: தாய் உள்பட 2 பேர் கைது

தஞ்சை அருகே ரெட்டிப் பாளையம் ரோடு அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மனைவி கோமதி (37). இவர்களது மகள் கவிதா (13). பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்தவர் மந்திரம் பிள்ளை மகன் லெட்சுமணன் (27). என்பவர் கோமதியிடம் ரூ.25 ஆயிரம் கொடுத்து அவரது மகள் கவிதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதனை கோமதி ஏற்றுக்கொண்டார். இதற்கு கவிதா ஒத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் 9–ந்தேதி லெட்சுமணன் இருந்த அறையில் மகளை கட்டாயப்படுத்தி தாய் கோமதி உள்ளே அடைத்து கதவை தாழிட்டார்.
அப்போது லெட்சுமணன் சிறுமி கவிதாவை மிரட்டி பாலியல் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சிறுமி கவிதாவை தூத்துக்குடிக்கு கடத்தி சென்று லெட்சுமணன் திருமணம் செய்ய முயன்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெரியம்மா உதவியுடன் சைல்டு அமைப்பில் புகார் கொடுத்தார். அந்த அமைப்பு மூலம் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இது குறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனிடமும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை ராசாமிராசுதார் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment