பெங்களூரில் இருந்து ஐதராபாத்துக்கு கடந்த மாதம் ஏர் இந்தியா பயணிகள் விமானம் வந்தது. விமானத்தை ஓட்டிய பைலட்டுகள் ஜெகன் எம்.ரெட்டி, எஸ்.கிரன் ஆகியோர், தங்களுடன் பிரபல நடிகை நித்யா மேனனை காக்பிட்டில் அமர வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விமானத்தில் வந்த ஒரு பயணி புகார் அளித்தார். அதில், விமான போக்குவரத்து பொது இயக்குநரக அங்கீகாரம் பெற்ற பார்வையாளர் அல்லது பரிசோதகர் அமருவதற்காக காக்பிட்டில் ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில், நடிகை நித்யா மேனன் உட்கார விமானிகள் அனுமதித்தனர் என்று அந்த பயணி கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகம், பாதுகாப்பு விதிமுறையை மீறி நடிகையை காக்பிட் பகுதியில் அனுமதித்ததற்காக இரண்டு விமானிகளையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment