உத்தர பிரதேச மாநிலத்தில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துபோன ஒரு தம்பதியின் பிள்ளைகளை, அவர்களின் பெற்றோர்களின் கல்லறையில் வசிக்கும்படி ஊர் மக்கள் வற்புறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்.
தாயின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த இவர்களின் 4 பிள்ளைகளும், 2 மாதத்திற்கு முன்னர் எய்ட்ஸ் பாதிப்பால் அவர் இறந்தப்பிறகு அனாதைகளாக விடப்பட்டனர்.
சில நாட்கள் தங்களின் உறவினர்களோடு வசித்துவந்த இந்த சிறுவர்களுக்கும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் இவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.வேறு வழியில்லாமல் இந்த பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களின் கல்லறையில் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக கல்லறையில் வசித்துவரும் இவர்கள் ஊர் மக்கள் ஏதேனும் சாப்பிடக்கொடுத்தால் மட்டுமே சாப்பிடுகிறார்கள்.
இந்த 4 பேரில் மூத்தரவரான 17 வயது சிறுவன், தங்களின் பெற்றோருக்கு இருந்ததுபோலவே எங்களுக்கும் எய்ட்ஸ் இருக்குமோ என்ற சந்தேகத்தில் தங்களை ஊரைவிட்டு அனுப்பிவிட்டதாகவும், எங்களுக்கு எய்ட்ஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் உறவினர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதி கிடைக்குமெனவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment