புதுடில்லி: இந்தியாவில் ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்ட வழக்கில் இது மிக கடினமான காரியம் என மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான முழு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ள கமலேஷ் வஸ்வாணி தனது வாதுரை ஆவணத்தில் : இந்தியாவில் இன்டர்நெட் மூலம் ஆபாசமூட்டும் இணையதளங்கள் அனைவரும் மிக எளிதாக பார்க்கும் வகையில் உள்ளது. இதனால் சின்னஞ்சிறு குழந்தைகள் இதனை பார்த்து சீரழிவான பாதைக்கு செல்ல நேரிடுகிறது. குறிப்பாக வெளிநாட்டு இணையதளங்கள் அதிகம் உள்ளன, எனவே இதனை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் இவ்வாறு கோரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு விளக்கம் கேட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முன்பு மத்திய அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆபாச இணையதளங்கள் தடை செய்வது என்பது மிக சிரமமானதாக இருக்கிறது. இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் படி ஆபாசமூட்டும் படங்கள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் விதமான 39 வெப்சைட்டுகளை தடை செய்ய கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்டர்நெட் சர்வீஸ் புரோவைடர்ஸ்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பல இணையதளங்களில் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் படங்கள் மற்றும் இணையதள லிங்குகளை பகிர்ந்து கொள்ளும் படியாக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment