Friday, 19 July 2013

ஆப்பிளால் லேப்-டொப்பால் வாழ்க்கை போச்சு


ஆப்பிள் லாப் டொப்பில் செக்ஸ் படங்களைப் பார்த்து அதற்கு அடிமையாகப் போன நபர் ஒருவரின் உண்மைக் கதை இது. பிரித்தானியாவில் மார்க்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் தனது ஆப்பிள் லேப் டொப்பில் தற்செயலாக ஒரு செக்ஸ் வீடியோ ஒன்றைப் பார்த்துள்ளாராம். இவர் தேடுபொறியில் தேடும் போதுதான் இந்த செக்ஸ் வீடியோ சிக்கியுள்ளது. அதனைப் பார்த்து பழக்கப்பட்ட இவர், தொடர்ந்தும் வேறு வேறு செக்ஸ் வீடியோக்களைப் பார்த்து ஒரு கால கட்டத்தில் அதற்கு அடிமையாகவே போய்விட்டாராம். 24/7 என்று சொல்லுவார்களே அதே அளவு அவர் அடிமையாகி 24 மணி நேரமும் அதனையே பார்த்து தனது காலத்தை ஓட்டியுள்ளார்.

இதனால் அவர் தனது மனைவியோடு நெருக்கமாக இருக்கவில்லையாம். பார்க்கும் செக்ஸ் படங்களில் வரும் பெண்களை தனது மனைவி என்று தான் நினைத்துவிடுவது வழக்கம் என்கிறார் இன் நபர். இதனால் அவர் குடும்பமே நிம்மதி இழந்தது. இதனையடுத்து தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி சும்மா இருக்கவில்லை. தனது கணவர் மிகவும் நல்லவர். ஆனால் ஆப்பிள் கம்பெனி தான் அவரைக் கெடுத்துவிட்டது என்று சொல்லி ஆப்பிள் கம்பெனி(ஆப்பிள் லேப்-டொப்) மீது வழக்கு பதிவுசெய்துள்ளார். ஆப்பிள் கம்பியூட்டரில் ஒரு பில்ட்டர்(அதாவது வடிகட்டி) இருந்திருந்தால், அது ஆபாசத் தளங்களுக்கு செல்ல அனுமதித்திருக்காது. அப்படி ஏன் அவர்கள் செய்யவில்லை என்று மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். 

No comments:

Post a Comment