பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 23 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த உணவின் மாதிரியை எடுத்து ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
உணவில் விஷம் கலந்திருந்ததே குழந்தைகள் சாவுக்கு காரணம் என்று பீகார் அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. உணவில் பூச்சிக்கொல்லி நச்சு அதிகமாக இருந்ததாகவும், உணவின் மாதிரி ஆய்வு குறித்த அறிக்கை நாளை கிடைக்கும் என்றும் அரசின் முதன்மைச் செயலர் தெரிவித்தார்.
உணவில் விஷம் கலந்ததே சாவுக்கு காரணம் என்பது மருத்துவ பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியான குழந்தைகளின் உடலை பரிசோதனை செய்த பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இதனை தெரிவித்தனர்.
உணவு அல்லது சமையல் எண்ணையில் விஷம் கலந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற குழந்தைகள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறினர்.
No comments:
Post a Comment