Friday, 5 July 2013

பாலியல் முறைகேடு பா.ஜ.க அமைச்சர் ராஜிநாமா



மத்தியப் பிரதேசத்தில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான மூத்த அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில நிதி அமைச்சராக இருந்த மூத்த தலைவர் ராகவ்ஜி(79) மீது அவரது வீட்டு வேலைக்காரர் ராஜ்குமார் டாங்கி வியாழக்கிழமை போலீஸில் பாலியல் முறைகேடு புகார் அளித்தார்.
மேலும், ஒரு பெண்ணுடன் அமைச்சர் நெருக்கமாக இருக்கும் காட்சி அடங்கிய சி.டி.யையும் போலீஸôரிடம் வழங்கினார்.
இந்த விவகாரம் குறித்து போலீஸôர், முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அமைச்சர் ராகவ்ஜியை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் வந்து சந்திக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். அவர் வந்ததும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு உத்தரவிட்டார்.
இது குறித்து ராகவ்ஜி கூறுகையில், ""முதல்வரின் ஆலோசனைப்படி நான் பதவி விலகியுள்ளேன். எதற்காக எனது ராஜிநாமா கோரப்பட்டது என்பது குறித்து அவர்தான் கூற முடியும். தாம் ராய்ப்பூர் செல்வதாகவும் பின்னர் பேசுவதாகவும் முதல்வர் என்னிடம் கூறினார்.
என் மீது ராஜ்குமார் டாங்கி என்ன குற்றச்சாட்டு சுமத்தினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் தவறாவை. எனது நற்பெயரைக் கெடுக்கவே என் மீது அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்'' என்றார்.
ராகவ்ஜியின் ராஜிநாமா கடிதத்தை முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், ஆளுநர் ராம் நரேஷ் யாதவுக்கு அனுப்பி வைத்தார். ராகவ்ஜி வகித்து வந்த நிதித் துறை, நீர்வளத் துறை அமைச்ரர் ஜெயந்த் மாலய்யாவிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் மொத்தம் 10 முறை பட்ஜெட் சமர்ப்பித்து சாதனை படைத்த மூத்த அமைச்சரான ராகவ்ஜி, பாலியல் புகாரில் சிக்கியிருப்பது இந்த ஆண்டு பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள பா.ஜ.க. அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ராகவ்ஜி மீது வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment