Friday, 12 July 2013

இன்று கடலில் மூழ்கி 3 மாணவர்கள் சாவு

தூத்துக்குடியில் இன்று கடலில் மூழ்கி 3 மாணவர்கள் சாவு

மதுரை திருநகரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 46 பேர் இன்று தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி தெர்மர்நகர் பீச்சில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது 5 மாணவர்களை கடல் அலை இழுத்து சென்றது. 
இதில் மதுரை தணக்கர்குளத்தை சேர்ந்த தேவ் ஆனந்த் (வயது 16), திருநகரை சேர்ந்த சதீஷ்குமார் (16), விஷ்ணுதரன் (16) ஆகிய 3 பேரும் கடலில் மூழ்கி பலியாகினர். 
பாலமுருகன், பாலாஜி ஆகிய 2 பேரையும் மீனவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment