Thursday, 11 July 2013

கத்தோலிக்க மதகுருமாரின் சிறுவர் பாலியல் விபரங்களை ஐநா கேட்டுள்ளது


றோமன் கத்தோலிக்க திருச்சபையின் மதகுருமாரால் சிறார் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விவகாரங்கள் குறித்த விபரங்களை தருமாறு வத்திக்கான் திருச்சபையை ஐக்கிய நாடுகள் மன்றம் கேட்டிருக்கிறது.
ஐநாவின் முன்பாக இது விடயமாக வத்திக்கானின் பிரதிநிதிகள் ஆஜராகி பதிலளிப்பதற்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில், சிறார் உரிமைகள் குறித்த ஐநா சாசனத்தை நடைமுறைப்படுத்தும் ஐநாவின் குழு இதனைக் கேட்டிருக்கிறது. பதிலளிக்க அழைக்கப்பட்டவர்களில் பலர் சிறார் துஷ்பிரயோகம் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.
இந்த சிறார் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக வத்திக்கான் திருச்சபை பெரும் சிக்கலை எதிர்கொண்டிருந்தது.
சிறார் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான தகவல்கள் மற்றும் ஏதாவது சந்தர்ப்பங்களில் இவை குறித்த முறைப்பாடுகள் வெளிவராமல் தடுக்கப்பட்டுள்ளனவா என்ற விபரங்கள் ஆகியவற்றையும் ஐநா கோரியுள்ளது.

No comments:

Post a Comment