Thursday, 11 July 2013

நிர்வாணமாக நின்று தாத்தா செக்ஸ் தொல்லை- பேத்தி தற்கொலை!

\ஆரணியில் தாத்தா ஒருவர் பேத்தி முன்பு நிர்வாணமாக நின்று செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் பேத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட பேத்தி ஜான்சி ராணிக்கு வயது 26. இவருக்கு திருமணம் வேறு ஆகியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இவர் துளசிராமன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கணவருடன் தனது தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார். ஜான்சி ராணியின் கணவர் துளசிராமன் சென்னைக்கு வேலைக்குச் சென்று விடுவார்.

இந்த நிலையில்....ஜான்சி ராணியின் தாயார் கஸ்தூரியின் எதிர்வீட்டில் அவரது 60 வயது சித்தப்பா வசித்து வந்தார்.

வக்ரம் பிடித்த இந்த 60 வயது தாத்தா, பேத்தி என்றும் பாராமல் அடிக்கடி நிர்வாணமாக நிற்பது, பேத்தியை ஆசைக்கு இணங்க அழைப்பது என்று செக்ஸ் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

இதனையடுத்து மனமுடைந்து வேறு என்னசெய்வதென்று தெரியாத ஜான்சி ராணி கடந்த 6ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி அரசு மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனில்லாமல் நேற்று முந்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாத்தா தலைமறைவாகியுள்ளார். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீசார் தாத்தாவை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment