Friday, 5 July 2013

படுக்கையறைக்கு பெண் கேட்ட சமாஜ்வாதி தலைவர்



லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் முன்னணி தலைவர் ஒருவரிடம், கட்சி பதவி கேட்ட பெண் உறுப்பினரிடம், "அழகான சின்னப் பெண்ணைக் கூட்டி வந்தால், பதவி தருகிறேன்' என கூறிய விவகாரம், உத்தர
பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உத்தர பிரதேச அரசில், வாரியம் ஒன்றின் தலைவராக இருப்பவர், பெயர் குறிப்பிடப்படாத, யாதவ். அதே கட்சியை சேர்ந்த, மது பாண்டே என்ற பெண், அந்த யாதவை அணுகி, கட்சிப் பதவி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த தலைவர், "பதவி தருகிறேன்; என் படுக்கைக்கு, சின்னப் பெண்ணை கூட்டி வா' என, கூறியுள்ளார். இந்த உரையாடலை, அந்தப் பெண், மொபைல் போனில் பதிவு செய்து, அதற்கான, "சிடி'யுடன், ஆரையா மாவட்ட கலெக்டர், ராஜலிங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
இது குறித்து, மது பாண்டே கூறும் போது, ""கட்சிப் பதவி தருகிறேன் என கூறி, பல முறை என்னை
தவறாக பயன்படுத்தியுள்ளார். பணம் கொடுத்துள்ளேன்; அவர் விரும்பிய பெண்களை அழைத்துச் சென்றுள்ளேன். எனினும், எனக்கு பதவி வழங்காமல் ஏமாற்றி வருகிறார். அவரை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத் தான், இந்த உரையாடலை பதிவு செய்தேன்,'' என்றார்.
மது பாண்டேவுக்கும், யாதவ் என்ற அந்த நபருக்கும் இடையே நடந்த உரையாடலில், "பெண்ணை கூட்டி வந்து விடாதே; சிக்கன் கொண்டு வா' என, அந்த யாதவ் கூறுகிறார். "பெண் வேண்டாமா; சிக்கன் தான் வேண்டுமா?' என, அந்தப் பெண் கேட்க, "சிக்கன் என்றால், 19 - 20 வயது பெண்' என, அந்த தலைவர் கூறுவது பதிவாகியுள்ளது. 

இது குறித்து கலெக்டர் ராஜலிங்கத்திடம் கேட்டபோது, ""மது பாண்டே புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவர் அளித்த, "சிடி' உண்மை தானா என, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளேன்,'' என்றார்.
சமாஜ்வாதி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாரதிய ஜனதா மற்றும் பிற கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

No comments:

Post a Comment