அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சான்போர்டு நகரை சேர்ந்தவர் டிரேவன் மார்டின்(வயது 17).
கறுப்பர் இனத்தை சேர்ந்த மார்டினை, கடந்தாண்டு வாட்மேனாக பணிபுரிந்த சிம்மர்மேன் சுட்டுக் கொன்றார்.
இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இனவெறி தாக்குதல் என்று அமெரிக்காவில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
இதனையடுத்து சிம்மர்மேனுக்கு எதிராக சான்போர்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஷிம்மர்மானை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கறுப்பர் இன வாலிபர் மார்டின் சிம்மர்மானை சுட்டார். எனவே, தன்னை தற்காத்துக் கொள்ளவே அவரை சுட்டுக் கொன்றதாக தீர்ப்பளித்தார்.
இது அமெரிக்கர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இனவெறியால்தான் நீதிபதி கறுப்பருக்கு எதிராக தீர்ப்பளித்தாக கூறியுள்ள மக்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment