ஈராக்கில் 92 வயது முதியவர் ஒருவர், தன்னை விட 70 வயது குறைவான இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
ஈராக்கின் பாக்தாத் அருகே உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்தவர் முசாலி முகம்மது அல்-முஜ்மாயி.
தற்போது 92 வயதை கடந்த முகம்மது, பூர்வீகமாக விவசாய தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி 58வது வயதில் காலமானார். இவருக்கு மொத்தம் 16 பிள்ளைகள்.
இதற்கிடையே தன்னை விட 70 வயது குறைவான இளம்பெண் ஒருவரை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இவருடன் இவரது பேரன்கள் இருவருக்கும் நேற்று ஒரே மேடையில் திருமணம் நடந்தது தான்.
சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த திருமண விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல் என்ற அனைத்து கேளிக்கை அம்சங்களுடனும் ஆடம்பரமாக அரங்கேறியது.
No comments:
Post a Comment