Friday, 12 July 2013

மாணவருக்கு கத்திக்குத்து; மாணவர்கள் கைது :



ரெட்டியார்சத்திரம் : திண்டுக்கல் அருகே, பஸ்சில் ஏற்பட்ட பிரச்னையில், 10ம் வகுப்பு மாணவரை கத்தியால் தாக்கிய, மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், மேலப்பட்டியைச் சேர்ந்தவர், நெல்சன், 15; தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம், பள்ளி முடிந்து பஸ்சில் திரும்பினார். அப்போது, அவரது காலை சிலர் மிதித்து விட்டனர். இதில், மற்ற சில மாணவர்களுடன் தகராறு ஏற்பட்டது. உடன் பயணித்தவர்கள் சமரசம் செய்தனர். நேற்று காலை, பள்ளி செல்ல, பஸ்சிற்காக காத்திருந்த போது, மெய்ஞானபுரத்தைச் சேர்ந்த, பிளஸ் 2, பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் மூவர், அங்கு வந்தனர். முந்தைய நாள் நடந்த சம்பவத்தைக் கூறி, நெல்சனை கத்தியால் குத்தினர். மயங்கி விழுந்த நெல்சனை, அக்கம் பக்கத்தினர், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நெல்சனை தாக்கிய மூவரையும், போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment