சிவகங்கை : சிவகங்கையில் சிறுமியை கொலை செய்து சமையலறையில் பாத்திரம் கழுவும் "சிங்க்' கீழ் உள்ள சுவரினுள் வைத்து பூசிய கொடூரனை போலீசார் தேடுகின்றனர்.சிவகங்கை இந்திராநகர் சோணையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன்,40. இவர் திருப்பூரில் டெய்லராக உள்ளார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு அஜய்,13,அக்ஷயா,8 இரு குழந்தைகள். அக்ஷயா பேசமுடியாதவர். கடந்த 4ந்தேதி மாலை 4 மணிக்கு வீட்டுக்கு அருகேயுள்ள "உழைக்கும் மக்கள் விடுதலை இயக்க' அலுவலகம் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அவரது தாய் உஷா அருகிலுள்ள வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் சிறுமியை காணவில்லை. அப்பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. அன்றிரவு சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் உஷா புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட மகளிர் போலீசார் இந்திராநகரில் தேடியும் காணவில்லை. இந்நிலையில், உழைக்கும் மக்கள் விடுதலை இயக்க அலுவலகத்திற்குள் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் சிவக்குமார்,போலீசார் அலுவலகத்தை திறந்த போது, சமையலறையில், பாத்திரம் கழுவும் "சிங்க்' அடிப்பகுதியில் புதிதாக செங்கற்கள் வைத்து பூசி,வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் பகுதியில் இருந்து ரத்தம் கசிந்தது. அந்த பகுதியை இடித்த போது, பையில் சிறுமி உடல் இருந்தது. கொலை செய்யப்பட்டது அக்ஷயா தான் என, பெற்றோர் உறுதி செய்தனர். கொலை நடந்த அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பாண்டுகுடி சின்னப்பன் மகன் அமல்ராஜ்,34, தங்கி இருந்தார். நேற்று தான் அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். "கேட்டரிங்' படித்த இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார். சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே பாஸ்ட் புட் கடை நடத்தினார். 4 மாதமாக இந்த வீட்டில் தான் தனியாக தங்கியுள்ளார். நேற்று வரை அங்கு இருந்த அமல்ராஜ், சிறுமி மாயமான அடுத்த நாளே அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றது,போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 4ம் தேதி மாலை அக்ஷயா இயற்கை உபாதை கழிக்கச் சென்றதை பார்த்திருக்கிறார். காணாமல் போன அக்ஷயாவின் தாய் உஷா வோடு அவரும் சேர்ந்து சிறுமியை தேடினார். ஆனால் அப்பகுதியினரை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளார்.
Saturday, 6 July 2013
சிவகங்கையில் சிறுமியை கொன்று சமையலறையில் புதைத்த கொடூரம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment