Monday, 22 July 2013

ஆண் துணை இல்லாமல் கடைக்கு வரும் பெண்களுக்கு பொருட்கள் விற்ககூடாது:

ஆண் துணை இல்லாமல் கடைக்கு வரும் பெண்களுக்கு பொருட்கள் விற்ககூடாது: பாகிஸ்தானில் மதவாதிகள் எச்சரிக்கை

ஆண் துணை இல்லாமல் மார்க்கெட் போன்ற பொது இடங்களுக்கு பெண்கள் வரக்கூடாது என வடமேற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய மதத்தலைவர்கள் தடை விதித்துள்ளனர்.

கைபர் பக்துங்வா மாகாணத்தை சேர்ந்த கரக் பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமிய மதத்தலைவரும் ஜமாத்-இ-இஸ்லாம் முன்னாள் தலைவருமான ஹபீஸ் அப்னே அமின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மார்க்கெட் போன்ற பொது இடங்களுக்கு தனியாக வரும் பெண்கள் ஆபாசமாக நடந்துக் கொள்வதால் ஆண் துணை இல்லாமல் இனி பெண்கள் மார்க்கெட்டுக்கு போகக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, தனியாக வரும் பெண்களுக்கு எந்த பொருட்களையும் விற்ககூடாது என்று மதவாதிகள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment