லண்டன்: இங்கிலாந்தில் கடுமையான வெயில் காரணமாக கடந்த 9 நாட்களில் 760 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. வெப்ப நிலை காரணமாக இங்கிலாந்து நாட்டில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் வானொலி, டிவி மூலமாக மக்களுக்கு முன்னெச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளை விட இந்த ஆண்டடில் தான் அதிகபட்சம் வெப்பம் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடுமையான வெயில் காரணமாக அடுத்த ஒரு வாரத்துக்குள் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு இங்கிலாந்தில் ஜூலை மாதம் 36.5 டிகிரி செல்சியல் வெப்ப நிலை நிலவியது. அதற்கு பிறகு தற்போதுதான் வெயில் மிக கடுமையாக உள்ளது என்கின்றனர்.
No comments:
Post a Comment