Friday, 26 July 2013

பேஸ்புக்கில் வெளியான படம் இளம்பெண்ணின் உயிரை மாய்த்தது!



சென்னை திருவான்மியூர் பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணின் பெயர் அனு. இவர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றிவந்தார்.

இவருக்கும் ரமேஷ் பாபு என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இவரும் ஒரு தனியார் நிறவனத்தில் சென்னையில் பணியாற்றிவந்தார்.

இந்த நிலையில் ஆடி மாதம் என்பதால் அனு தனது பெற்றோருடன் திருவான்மியூரில் தங்கியிருந்தார். 

இத்தருணத்தில் கணவர் ரமேஷ் பாபு மனைவி அனுவின் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்க நேரிட்டது. இதில் அனுவும் அவருடன் பணியாற்றும் ஒருவரும் சேர்ந்து இருந்த படம் வெளியாகியிருந்தது. தன் மனைவி வேறு ஒருவருடன் இணைந்து இருப்பது போன்ற படத்தை கண்டதும் ரமேஷ் பாபு அதிர்ந்தார்.

உடனே மனைவி அனுவிடம் இதுபற்றி கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருகுடுபத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கடும் மனவேதனை அடைந்த அனு தன் தாத்தா வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருமணமாகி ஒருமாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment