
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த பௌலிங் கிரீன் ஸ்டேட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்த விவரங்கள்:அமெரிக்காவில் திருமணம் செய்யும் வழக்கம் மிகவும் குறைந்து ள்ளது. அதாவது ஆயிரம் ஜோடிகளில் 31 ஜோடி மட்டுமே திருமணம் செய்து கொள்கின்றன. சில பெண்கள் திருமணத்துக்காக நீண்ட காலம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 1920¢ம் ஆண்டில் இங்கு திருமண செய்வது 92.3 சதவீதமாக இருந்தது. பின்னர் 1970ல் இது 60 சதவீதமாக குறைந்தது.இதுகுறித்த பல்கலைக்கழக ஆய்வு மைய துணை இயக்குநர் சூசன் பிரவுன் கூறுகையில், திருமணம் கட்டாயம் இல்லை என்பதால் ஒரு சிலர் மட்டுமே திருமணம் செய்கின்றனர். மற்றவர்கள் சேர்ந்து வாழும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர் என்றார்.
அமெரிக்காவில் பெண்கள் முதல் திருமணம் செய்துகொள்ளும் வயதும் இந்த நூற்றாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இங்கு சராசரியாக 27 வயதில்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். அதே போல விவாகரத்து செய்யும் வழக்கமும் தற்போது அதிகரித்துள்ளது. 1920ம் ஆண்டில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த விவாகரத்து விகிதம் தற்போது 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. விவாகரத்து பெறுபவர்களில் மிகக் குறைவானவர்களே மறுமணம் செய்து கொள்கின்றனர்.திருமணம் செய்வது பல்வேறு இனம், மதத்தை சார்ந்தவர்களிடையே குறைந்து வந்தாலும் குறிப்பாக ஆப்ரிக்க அமெரிக்கர்கள் திருமணம் செய்யும் வழக்கம் மிகவும் குறைந்துள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment