ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பவுசியாபேகம். கணவரை இழந்த இவருக்கு சாரா பேகம் (வயது4) என்ற மகளும் ரெகான் என்ற மகனும் உள்ளனர். மகள் சாரா பேகத்துக்கு அடிக்கடி வலிப்பு நோய் தாக்குவதுண்டு. வலிப்பு வரும் போதெல்லாம் பவுசியாபேகம் இரும்பு கம்பியால் அடிப்பது உண்டு. உடனே வலிப்பு நின்று விடும். இதுதான் சரியான சிகிச்சை என்று நம்பியிருந்தார்.
வலிப்பு நிற்காவிட்டால் பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு போட்டால் நின்று விடும் என்று சிலர் சொன்னதை மனதில் பதிய வைத்துக் கொண்டார். சம்பவத்தன்று இரவு வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த சாரா பேகத்துக்கு வலிப்பு வந்தது. உடனே தாய் பவுசியா பேகம் இரும்பு கம்பியால் முதுகில் அடித்தார். பல முறை அடித்தும் வலிப்பு நிற்க வில்லை. இதனால் இரும்பு கம்பியை தீயில் காய்ச்சி உடலில் பல இடங்களில் சூடு போட்டார். சிறிது நேரத்தில் சாராபேகம் எந்த அசைவும் இல்லாமல் மயங்கினார்.
உடனே பதறிப்போன பவுசியாபேகம் ஆம்புலன்ஸ் வரவழைத்து மகளை உஸ்மானியா ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே சிறுமி பரிதாபமாக இறந்தார்.
மகளை நானே கொன்று விட்டேனே என்று பவுசியா பேகம் ஆஸ்பத்திரி வாசலில் நின்று கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்க
No comments:
Post a Comment