Thursday, 11 July 2013

பல் தேய்க்கும் போது திடீர் வலிப்பு: பெண்ணின் தொண்டைக்குள் சிக்கிய டூத் பிரஷ்

பல் தேய்க்கும் போது திடீர் வலிப்பு: பெண்ணின் தொண்டைக்குள் சிக்கிய டூத் பிரஷ்
ல் தேய்க்கும் போது வலிப்பு நோய் ஏற்பட்டதால் பெண்ணின் தொண்டைக்குள் ‘டூத் பிரஷ்’ சிக்கியது. அந்த பெண்ணின் பெயர் யசோதா, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சிந்தா ரெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். 
நேற்று காலை யசோதா வீட்டில் பல் தேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. வாய்க்குள் டூத் பிரஷ் வைத்த நிலையில் வலிப்பு நோயால் துடித்ததால் ‘டூத் பிரஷ்’ தொண்டைக்குள் சிக்கி காதின் பின்புறம் வரை குத்தி கிழித்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது.
3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு டாக்டர்கள் தொண்டையில் சிக்கிய டூத் பிரசை வெளியே எடுத்தனர். தற்போது யசோதா குணம் அடைந்து வருகிறா

No comments:

Post a Comment