Thursday, 11 July 2013

புகைபிடி தடையால் இதய நோய் குறைவு




வாஷிங்டன் : வேலை பார்க்கும் இடங்களில் புகைபிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 9 மில்லியனுக்கும் அதிகமானோரின் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐந்த பேரில் ஒருவர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாகவும், அவர்களில் மூன்றில் ஒருவர் பணிசெய்யும் இடத்தில் புகைப்பிடிபவராக இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் புகைப்பிடித்தலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. 

No comments:

Post a Comment