Friday, 19 July 2013

மது கொடுத்து மாணவியை கற்பழித்த மர்ம கும்பல்



ஆந்திர மாநிலத்தில் ஒரு நர்சிங் மாணவியை மது குடிக்க வற்புறுத்திய பின்னர் மர்ம கும்பல் ஒன்று அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம் தர்ஷி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கர்னூல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படிப்பு படித்துவந்தார்.

20 வயது இளம்பெண்ணான இந்த மாணவி, தேர்ச்சி அடையாத ஒரு தேர்வினை மீண்டும் எழுவதற்கு விண்ணப்பிக்க கர்னூல் சென்றுள்ளார். கல்லூரியில் தேர்விற்காக விண்ணபித்துவிட்டு இரவு சுமார் 10 மணியளவில் அவர் தன் ஊருக்கு திரும்ப கல்லூரி அருகில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறினார். 

மாணவி தனியாக உள்ளதை கண்ட ஆட்டோ ஓட்டுனர், ஆட்டோவை வேறு ஒரு இடத்திற்கு ஓட்டிச்சென்றார். அந்த மாணவி உதவி கேட்டு சத்தம் எழுப்பியபோது, மேலும் 3 பேர் வந்து ஆட்டோவில் ஏறினார்கள். அவர்கள் அந்த மாணவியை ஒரு காட்டுப் பகுதிக்கு கூட்டிசென்று அவரை மது குடிக்க வற்புறுத்தியுள்ளனர்.அளவிற்கு அதிகமான மதுவை மாணவிக்கு வற்புறுத்தி கொடுத்த அவர்கள், மாணவி மயங்கியதும் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மறுநாள் காலை சுமார் 3 மணியளவில் பிருந்தாவன் என்ஜினீயரிங் கல்லூரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மயங்கிய நிலையில் இருந்த இந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணுக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment