Friday, 5 July 2013

சிரியாவில் பெண்கள் மேக்கப் போட, மாடர்ன் உடைகள் அணிய தடை





சிரியாவில் பெண்கள் மேக்கப் போட, ஒழுங்கில்லாத ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் போராளிகள் பிடியில் இருக்கும் பகுதியில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது 
இந்நிலையில் அலெப்போ நகரில் உள்ள பர்தௌஸில் பெண்கள் மேக்கப் போட, ஒழுங்கில்லா ஆடைகள் அணிய இஸ்லாமிய சட்ட கவுன்சில் ஒன்று தடை விதித்துள்ளது.
இது குறித்து பர்தௌஸ் கவுன்சிலின் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, முஸ்லிம் பெண்கள் இருக்கமான உடை மற்றும் ஒழுங்கில்லாத உடை அணிந்தோ அல்லது மேக்கப் போட்டுக் கொண்டோ வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து இஸ்லாமிய சகோதரிகளும் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்ற வேண்டும், கடவுளை மதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விமர்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment