Friday, 19 July 2013

டிவிட்டரில் பாவ மன்னிப்பு தரும் போப்



வாடிகனில் உள்ள போப் பிரான்சிஸ் நவீன காலத்திற்கு ஏற்ப இனி சமூக வலைதளமான டிவிட்டர் மூலம் பாவமன்னிப்பு அளிக்கவிருக்கிறார்.

இந்த தலைமுறையினரின் அன்றாட வாழ்க்கைமுறையில் சமூக வலைத்தளம் மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றிற்கு முக்கிய இடம் உள்ளது. 

இன்றைய நவீன உலகத்தில் பழைய முறைகளை அனைவராலும் பின்பற்ற முடியாத நிலை இருப்பதால் டிவிட்டர் மூலம் அனைத்து முக்கிய விஷயங்களையும் உலக மக்களுடன் வாடிகானிலிருந்து போப் பகிர்ந்துக்கொள்கிறார். இதன் மூலம், வாடிகன் மற்றும் பிற இடங்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை உலகெங்கிலும் உள்ள மக்கள் தெரிந்துகொள்வதற்கும் , அவர்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸின் டிவிட்டர் அக்கவுண்டை இதுவரை 2.7 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment