Friday, 26 July 2013

சாமி உத்தரவுபடி கணவரை கொன்றேன் மனைவி



காட்டுமன்னார்கோவில் : சாமி உத்தரவிட்டதால் கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தேன் என மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை சேர்ந்தவர் பரதன் (44). இவரது மனைவி  உஷாராணி (38). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த உஷாராணி அம்மிக்கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த கணவர் தலையில் போட்டு கொலை செய்ய முயன்றார். இதில் பரதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.  இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் உஷாராணியிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் அளித்த வாக்கு மூலம்: சம்பவத்தன்று காலை எனக்கும், கணவருக்கும் தகராறு ஏற்பட்டு கணவர் என்னை தாக்கினார். பின்னர் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார். நான் அழுது கொண்டிருந்தேன். அப்போது, எனது கனவில் ஓம் சக்தி தாய் தோன்றி, உன் கணவரை அடித்து கொன்று விடு என்று கூறியதால், அம்மிக்கல்லை எடுத்து தலையில் போட்டேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment