ஐதராபாத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை கண்டிக்கும் வகையில் அவரது தாய் கரண்டியால் அடித்ததில் அந்த 6 வயது சிறுமி உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள சரன்நகரை சேர்ந்தவர் கவுசியா பேகம், இவரது மகள் பர்ஹா பேகம். 6 வயதான பர்ஹா பேகம் நேற்று வீட்டிற்கு வெளியே கொட்டப்பட்டிருந்த மணலில் விளையாடிக்கொண்டிருந்தார்.
இதனை கண்டு கோபமடைந்த கவுசியா மகளை வீட்டிற்கு வரும்படி கூறியிருக்கிறார். பல முறை அழைத்தப்பிறகும் பர்ஹா வீடு திரும்பாததால் ஆத்திரமடைந்த கவுசியா தனது கையில் இருந்த கரண்டியால் குழந்தையை அடிக்க தொடங்கினார்.அக்கம் பக்கத்தினர் தடுத்தும் கேட்காமல் தொடர்ந்து 6 வயது சிறுமியை அடித்த கவுசியா, அவரின் கையில் இருந்த கரண்டியால் சிறுமியின் கழுத்தில் அடித்தார்.
வலி தாங்காமல் அழுது துடித்த பர்ஹா ஒரு கட்டத்தில் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், பர்ஹாவிற்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. அவளது தாய் அவளை தொடர்ந்து அடித்ததே அவளது மரணத்திற்கு காரணம் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment