Friday, 12 July 2013

போதையில் தூங்கிய கேட் கீப்பர் : பயணிகள் ரயில் தாமதம்


காரைக்கால் : காரைக்காலில், ரயில்வே கேட் கீப்பர், குடிபோதையில் தூங்கியதால், திருச்சி பயணிகள் ரயில், 10 நிமிடம் நிறுத்தப்பட்டது. திருச்சியில் இருந்து, காரைக்கால் வந்த பயணிகள் ரயில், நேற்று காலை 11:10 மணிக்கு, கருக்கலாச்சேரி கேட் அருகே வந்தது. அப்போது, கடற்கரை சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்படவில்லை. ரயில் செல்வதற்கான சிக்னலும் கிடைக்கவில்லை. இதனால், ரயில், கருக்கலாச்சேரி கேட் அருகே, 10 நிமிடம் நின்றது. கேட் மூடப்படாதது குறித்து, காரைக்கால் ரயில் நிலையத்திற்கு தகவல் சென்றது. இதற்கிடையே, பொதுமக்கள் கேட் கீப்பர் அறைக்கு சென்று பார்த்தனர். கேட் கீப்பர் ராஜா தூங்கியுள்ளார்; அவரைத் தட்டி எழுப்பி, கேட்டை மூடுமாறு கூறினர். போதை தெளிந்து எழுந்த ராஜா, கேட்டை மூடினார். 10 நிமிட தாமத்திற்கு பின், ரயில் புறப்பட்டு, காரைக்கால் ரயில் நிலையம் சென்றடைந்தது.
Click Here

No comments:

Post a Comment