இங்கிலாந்தில் 16 வயது மாணவனுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த ஆசிரியை ரோசன்னா லாங்க்லி. இவர் தனது வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவனுடன் 6 வாரமாக தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
குறித்த மாணவனிடம் ஆசையாக பேசியும், தனது நிர்வாண புகைப்படங்களை எஸ்எம்எஸ், எம்எம்எஸ்-ஸாக அனுப்பியும் தனது வலையில் சிக்கவைத்துள்ளார்.
மேலும் அந்த மாணவனின் பெயரையும் தனது மார்பில் பச்சை குத்தி வைத்துள்ளார்.
அத்துடன் வார இறுதி நாட்களில் லண்டனுக்கு வெளியே கூட்டிச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த விவகாரம் வெளியே தெரியவர, ஆசிரியை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், தண்டனையை 2 வருடத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் இனிமேல் இந்த ஆசிரியை சிறார்களுக்கு பாடம் நடத்த கூடாது என்றும் தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment