பேஸ் புக் எனப்படும் சமூக வலைதளத்தை 13 வயதுக்குட்பட்டவர்கள் உபயோகப்படுத்த தடை விதிப்பது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியை அடுத்துள்ள குர்கானில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், பேஸ்புக் எனப்படும் சமூக வலைதளம் மூலம் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளனர். இதை கண்டுபிடித்த சமூக ஆர்வலர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக் எனும் சமூக வலைதளத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, பேஸ்புக் வலைத்தளம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு பேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்த அனுமதி இல்லை என்று சமூக வலைதளத்தில் அக்கவுண்ட், ஆரம்பிக்கும் போதே அறிவுறுத்தப்படுகிறது என்றார்.
இருப்பினும் இதை ஒழுங்குமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலை தளங்களை பயன்படுத்த தடை என்பதை அறிவுறுத்தும் வாசகங்களை பெரிது படுத்த வேண்டும், என்றும் மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment