Friday, 19 July 2013

தந்தை, வளர்ப்பு தாயால் துன்புறுத்தப்பட்டு கோமா நிலையில் உள்ள சிறுவன் கவலைக்கிடம்



கேரளாவில் தந்தை மற்றும் வளர்ப்பு தாயால் துன்புறுத்தப்பட்டு தற்போது கோமா நிலையில் இருக்கும் 5 வயது சிறுவனின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில், தந்தை மற்றும் வளர்ப்பு தாயால் பல நாட்களாக கொடுமைப்படுத்தப்பட்டு உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 வயது சிறுவன் தற்போது கோமா நிலையில் உள்ளான்.

இரண்டு கால்கள் முறிந்து, உடல் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்த அவனது தந்தையும், வளர்ப்பு தாயும் சிறுவன் குளிக்கும் போது தவறி விழுந்துவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்திருந்தனர்.சிறுவனின் உடலில் ஏற்பட்டிருந்த காயத்தால் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட, அவர்கள் போலீசாரிடம் தகவல் அளித்தனர்.

உடனடியாக சிறுவனின் நிலையை கண்ட போலீசார், இதற்கு காரணமான அவனது தந்தையையும், வளர்ப்பு தாயையும் கைது செய்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருக்கும் அந்த சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment