மக்களுக்கு மலிவு விலையில் உணவுகள் வழங்குவது எந்த ஒரு அரசுக்கும் நல்ல அரசியலாகவே இருக்கும். அந்த ரீதியில் தமிழகத்தில் அம்மா உணவகங்கள் நாட்டில் நல்ல பெயரை பெற்றுள்ளன. இதுபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசு கொல்கத்தாவில் மொபைல் வேன்கள் மூலம் மக்களுக்கு நியாய விலையில் மீன், சிக்கன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை விற்று வருகின்றது.
21 வேன்கள் மூலம் இவற்றை விற்றுவரும் அவர்கள், மார்க்கெட் விலைக்கு குறைவாக சிக்கன்களை இயற்கை முறையில் அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் விற்று வருகின்றனர். ஆனால், தற்போது ரமலான் வருகையை முன்னிட்டு அங்கு ஒரு கிலோ சிக்கன் 200-ரூபாய்க்கு மேல் விற்கிறது.
இந்நிலையில், ரமலானை முன்னிட்டு மக்கள் வசதிக்காக நியாய விலையில் சிக்கன் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment