Tuesday, 16 July 2013

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 8 குழந்தைகள் பலி



பீகார் மாநிலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 8 குழந்தைகளும், 8 முதல் 12 வயது வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
மேலும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகள் சாவுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட உணவே காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே, இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment