போபால் : ரயிலில் பயணித்த பெண்ணை, மொபைல் போனில் படம் பிடித்த, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் இருவர், கைது செய்யப்பட்டனர். டில்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன் - ஐதராபாத், "தட்சின் எக்ஸ்பிரஸ்' ரயில், நேற்று, மத்திய பிரதேசம், விதிஷா ரயில் நிலையம் வந்தது. அப்போது, போபால் செல்ல, 23 வயது பெண் ஒருவர், அந்த ரயிலில் ஏறினார். அதே ரயிலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, தர்மேந்திர குமார் மற்றும் தினேஷ் குமார் தாக்கூர் ஆகியோரும் பயணித்தனர். இந்நிலையில், ரயிலில் பயணித்த அந்தப் பெண்ணை, பல கோணங்களில், தர்மேந்திர குமார் வீடியோ எடுத்தார். இதை கவனித்த அந்தப் பெண், கடுமையாக ஆட்சேபித்ததுடன், தர்மேந்திர குமாருடன் வாக்குவாதம் செய்து, போனை பறிக்க முயன்றார். அப்போது, தினேஷ் குமார் தாக்கூர், அந்தப் பெண்ணை தாக்கினார். இந்த சம்பவம், சக பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த சக பயணிகள், ராணுவ வீரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போபாலை அடுத்த, நிஷாத்புரா ரயில் நிலையத்தை ரயில் சென்றடைந்தது. பயணிகளில் ஒருவர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால், ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின், சம்பவம் நடந்த ரயில் பெட்டிக்கு வந்த ரயில்வே போலீசாரிடம், நடந்த விவரத்தை, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பயணிகள் கூறியதையடுத்து, ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் இருவரையும், போலீசார் கைது செய்தன
Monday, 15 July 2013
பெண்ணை மொபைலில் படம் பிடித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இருவர் கைது

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment